மேரி க்யூரி புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
இவரது சாதனைகளுள் முதன்மையானவை பின்வருமாறு:
கதிரியக்கம் ( இது இவர் உருவாக்கிய சொல்) பற்றிய ஓர் கோட்பாடு
கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும்
இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம் ஆகியனவற்றை கண்டுபிடித்தல். இவரது வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் குயூரி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். இவை மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாக இன்று திகழ்கின்றன. முதலாம் உலகப் போரின் போது, இராணுவ துறையில் கதிரியக்க மருத்துவ மையங்களை முதன்முறையாக நிறுவினார்.
ஒரு பிரஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும் , மேரி ஸ்க்ளோடவ்ஸ்கா-குயூரி (இவர் இரண்டு குடும்பபெயர்களையும் பயன்படுத்தினார்), தனது போலந்து நாட்டு அடையாளத்தை இழக்கவில்லை. தனது மகள்களுக்கு போலிஷ் மொழி கற்றுதந்தார். மேலும் போலந்திற்கு அவர்களை சில முறைகள் அழைத்துச்சென்றிருக்கிறார். தான் முதன்முதலாக கண்டுபிடித்த தனிமத்திற்கு தனது தாய்நாட்டை கவரவிக்கும் வகையில் போலோநியம் என்று பெயரிட்டார்.
கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ல் இறந்தார்.
No comments:
Post a Comment