ஸ்டீபன் வில்லியம் ஹாகிங்
ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு.பிரபஞ்சத்தில், பூமி தவிர, ஏனைய கோள்-களிலும் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனக் கருத்துத் தெரிவிக்கிறார்.தமது 65 ஆம் பிறந்த நாளான 8.1.2007-ல் ஈர்ப்புவிசையற்ற விண்பயணக்கலத்தில் (ZERO GRAVITY FLIGHT) பயணித்துப் பார்க்கும் விருப்பத்தினை வெளி-யிட்டார்.உலகையும் பிரபஞ்சத்தையும் படைப்பதற்குக் கடவுள் என்ற ஒன்று தேவையில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தவர் ஹாகிங்.ஹாகிங்கைத் தாக்கிய நரம்புத்தசைச் செயலிழப்பு நோய் 1974 முதல் அவரைச் செயலிழந்தவராகவே ஆக்கிவிட்டது.இந்த நோய்தான் தாக்கியிருக்கிறது என்பது கண்டு-பிடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குமேல் யாரும் வாழ்ந்தது கிடையாது. அப்படி வாழ்பவர்கள் அரிது. இதுவரை உள்ள பதிவுகளின்படி ஒருவர் 32 ஆண்டுகள் நோயுடன் வாழ்ந்துள்ளார். ஆனால், ஹாகிங் 46 ஆண்டு-களுக்கு மேல் வாழ்ந்துவருகிறார். அப்படிப்பட்ட அரிதினும் அரிதான அறிவியல் அறிஞராகத் திகழும் ஹாகிங் ஒரு பகுத்தறிவாளர் என்பது கூடுதல் பெருமை.
No comments:
Post a Comment