Thursday, 7 August 2014

குருதி

குருதி நீர்மம் என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், குருதிச் சிறுதட்டுக்களும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன. குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனதெனினும், நூற்றுக்கணக்கான வேறு பொருட்களும் உள்ளன. அவற்றுள் பல்வேறு புரதப்பொருள்கள் (proteins), உடல் செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், உப்புபோன்ற தாதுப்பொருட்கள் சிலவாகும்.

குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் ஆல்புமின் (albumin), நாரீனி (புரதம்) (fibrinogen), குளோபுலின் (globulin), என்பவை சில. ஆல்புமின் என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இதன் முக்கிய தொழில் குருதியில் சவ்வூடு பரவல் அழுத்தத்தைச்சீராக வைத்திருத்தல் ஆகும். இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து குருதி கசிந்து வெளியேறி அருகிலுள்ளஇழையங்களினுள் சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். நாரீனி என்னும் புரதம் இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகிகுருதி உறைந்து, மேலதிக குருதிப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நாரீனி இல்லையெனில் குருதி உறையாமை ஏற்படும். நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது பிறபொருளெதிரியாகும். இது நோந் எதிர்ப்பாற்றல் முறைமையின் பகுதியாக இருந்து, நோய்த்தொற்றுக்களுக்க எதிராகத் தொழிற்படும்.

No comments:

Post a Comment